பீடோர்,ஜூன்27 – தேவை அறிந்து மக்களுக்கு உதவுவதே ஒரு நல்ல தலைவனுக்கும் அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் தனித்துவ அடையாளம் என்பதை பேரா மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோ தொடர்ந்து நிலை செய்ய வைப்பதாக பீடோர் வாழ் மக்கள் புகழ்கிறார்கள்.
மேலும்,மக்களின் சூழல் உணர்ந்து அவர்களின் வீட்டைத் தேடி வரும் உதவிகள் நெகிழ வைப்பதாகவும் அவர்கள் பூரித்துப் போகிறார்கள்.
சேவை என்பது மக்களுக்கானது.மக்கள் தேடி வருவதற்கு முன்னரே அவர்களை நாடி உதவி செய்வதே எங்களின் இலக்கு என்றும் கூறும் டத்தோ இளங்கோ பீடோர் வட்டாரத்தில் இனம்,மொழி,மதம் கடந்து அனைவருக்கும் உதவிகள் கிடைக்க வழி செய்து வருவதாக கூறினார்.
ஒவ்வொரு நாளும் பீடோர் வட்டாரத்தில் மக்களின் தேவைகளை கவனித்து வருவதாகவும் அவர்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுங்கை சட்டமன்றத்திற்கு உட்பட்ட தொகுதியாக பீடோர் இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கும் கோவில்களுக்கு தேவையான மானியம் உட்பட இதர உதவிகளையும் திறன்பட மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பீடோர் முழுவதும் மக்களை சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் போது மக்களின் ஆதரவும் அவர்கள் ம இ கா மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் பெருமிதமாக இருப்பதாக கூறிய இளங்கோ மக்களுக்கான கட்சியாக ம இ கா மட்டுமே திகழ்வதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பதாகவும் அறிய முடிவதாக கூறினார்.
இதற்கிடையில்,ம இ காவின் செயல்பாடும் சேவையும் இன்றைய கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் எங்களுக்கு பெரும் நெகிழ்வையும் உற்றத்துணையாகவும் இருப்பதாக பீடோர் வாழ் மக்கள் தெரிவித்தனர்.
பொருளாதார நிலையில் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் எங்களுக்கு ம இ கா தொடர்ந்து வழங்கி வரும் உதவியும் பங்களிப்பு பெரும் நிறைவாக இருப்பதாக நன்றியோடு அவர்கள் குறிப்பிட்டனர்.